“நான் ஊருக்குள்ள வர்றதுக்கு ஏன் தடை விதிச்சாங்கனு தெரில" - விஜய்

நான் ஊருக்குள்ள வர்றதுக்கு ஏன் தடை விதிச்சாங்கனு தெரியவில்லை. ஆனால் மீண்டும் உங்கள் ஊருக்குள்ளேயே வருவேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு எதிர்த்து காஞ்சிபுரம் ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பிரச்சனைக்கு ஆளுநரை சந்தித்து விஜய் புகார் அளித்த நிலையில், இன்று பரந்தூர் போராட்டக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்க பரந்தூர் சென்றார்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரிடையே உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். ஆனால் அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் விமான நிலையத்திற்கும் எடுத்திருக்க வேண்டும். நான் ஊருக்குள்ள வர்றதுக்கு ஏன் தடை விதிச்சாங்கனு தெரியவில்லை. ஆனால் மீண்டும் உங்கள் ஊருக்குள்ளேயே வருவேன். நம்ம புள்ளைங்க ஒரு நோட்டீஸ் கொடுத்ததுக்குத் தடை விதிக்கிறாங்க. உங்களுக்காகவும் உங்கள் ஊருக்காகவும் இனி உங்கள் வீட்டுப் பிள்ளையான நானும் தவெக தோழர்களும் சட்டத்துக்குள்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் நிற்போம். எதிர்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு.. இதே ஆளுங்கட்சியா ஆனா பிறகு விவசாயிகளுக்கு எதிர்ப்பா..?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.