“நாடகம் ஆடுவதில் தி.மு.க அரசு கில்லாடி”- விஜய்

 
vijay

பரந்தூரில் இருந்து என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு எதிர்த்து காஞ்சிபுரம் ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பிரச்சனைக்கு ஆளுநரை சந்தித்து விஜய் புகார் அளித்த நிலையில், இன்று பரந்தூர் போராட்டக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்க பரந்தூர் சென்றார்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரிடையே உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “பரந்தூரில் இருந்து என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டுவிட்டு அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன். பரந்தூர் போராட்டம் பற்றி ராகுல்னு ஒரு சின்ன பையன் பேசியதை கேட்டேன். அந்த குழந்தையோட பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டுமென தோணுச்சு. உங்களோடு பேச வேண்டுமென தோணுச்சு. உங்கள் எல்லார் கூடவும் தொடர்ந்து நிற்பேன் என சொல்ல வேண்டுமென தோணுச்சி. உங்கள் வீட்டு பிள்ளையாக சட்டத்திற்கு உட்பட்டு உங்களுடன் உறுதியாக நிற்பேன். மக்கள் நம்பும் வகையில் நாடகம் ஆடுவதில் திமுக அரசு கில்லாடி. விமான நிலையத்தை தாண்டி இந்த திட்டத்தில் ஏதோ ஒரு லாப உள்நோக்கம் உள்ளது. நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, ஏர்போர்ட்டே வரக்கூடாதுனு சொல்ல வில்லை. இங்கு வரக்கூடாதுனு தான் சொல்கிறேன்” என்றார்.” என்றார்.