நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா? - விஜய்

 
ச் ச்

பாசிச பாஜகவுடன் நேரடி கூட்டணியோ அல்லது மறைமுக கூட்டணியோ அமைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image

சும்மா சினிமாக்காரன், சினிமாக்காரன்னு சொல்றீங்க. அம்பேத்கரை, காமராஜரை தோற்கடித்தவங்க சினிமாக்காரங்க இல்லை, அரசியல்வாதி. அதனால அரசியல்வாதிகள் அறிவாளிகளும் இல்லை, சினிமாக்காரங்க முட்டாள்களும் இல்லை. மோடி அவர்களே நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா? யாருடன் கூட்டணி என சஸ்பென்சிலேயே சஞ்சாரம் செய்யுங்கள்!  எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்படததை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர். 2026ல் யாருக்கு ஓட்டு போடனும்னு அந்த அப்பழுக்கற்ற அதிமுக தொண்டர்களுக்கு நல்லாவே தெரியும்.

Image

அவரே அரசியலுக்கு வரவில்லை. இவர் எப்படி வருவார் என்றார்கள். விஜய்க்கு கூடும் கூட்டம் எப்படி ஓட்டாகும் எனார்கள். மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஓட்டுகள் தான் என் தொண்டர்கள். என் வீட்டு ரேஷன்கார்ட்ல வேணும்னா உங்க பெயர் இல்லாம இருக்கலாம், உங்க வீட்டு ரேஷன்கார்ட்ல வேணும்னா என் பெயர் இல்லாம இருக்கலாம், ஆனா நாம எல்லாரும் ஒன்னு தான், நீங்க எல்லாரும் என்னுடைய ரத்த உறவு... 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர். அப்படினு நினைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாழ்நாள் முழுக்க மக்களுக்காக உழைப்பதை தவிர வேறு எண்ணம் இல்லை. எனக்கு இப்போது வேறு வேலையும் இல்லை. கூடிய சீக்கிரம் மக்களை போய் சந்திக்கப் போறேன். அவங்களோடு மனசு விட்டு பேசப் போறேன். அதுக்கு அப்புறம் இந்த சாதாரண முழக்கம், இடிமுழக்கமாக மாறும்" என்றார்.