உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது- விஜய்

 
விஜய்

உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றினார்.

விஜய்

சென்னை பனையூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தலைவர் விஜய், “உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது... இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும்.இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள், பயணித்தீர்கள். உங்களது நீண்ட கால கோரிக்கை எப்படி நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக N பயணத்தை தொடர்ந்து வருகிறோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விட இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து பயணிப்போம் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம்” என்றார்.