”ஏன் ஜி, தமிழ்நாடு, தமிழர்கள்னாலே அலெர்ஜி”... தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார்- மோடியை விளாசிய விஜய்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 1,710 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர் விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்றனர்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் தேர்தல் கூட்டணி, கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் அரசியல் கூட்டணி! இப்படி உங்க பெயரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பெயரை சொல்லியே பயமுறுத்துறதும்... இப்படி கரப்சன்சன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜீ... தமிழ்நாடு, தமிழர்கள்னாலே அலர்ஜி? தமிழ்நாட்டிலிருந்து வரும் ஜி.எஸ்.டி.யை கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க, ஆனா, பட்ஜெட்ல நிதியை ஒதுக்க மாட்டிங்கிறீங்க... இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. ஒரே நாடு, ஒரே தேர்தல் என நீங்க ஆரம்பிக்கும்போதே புரிந்துவிட்டது மோடி சார். உங்க பிளான் என்னனு?
தமிழ்நாட்டை கொஞ்சம் பார்த்து Care full - ஆ ஹேண்டல் பண்ணுங்க... மாண்புமிகு மோடி ஜி அவர்களே என்னமோ உங்க பெயரையெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க... தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார்!அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது.. காற்றை தடுக்க முயன்றால் சூறாவளியாக ஏன் புயலாக கூட மாறும்” என்றார்.