"என்னது புஷ்பா மாடல் அரசா? தேம்பி அழ வேண்டாம்"- உதயநிதிக்கு விஜய் பதிலடி
தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என திமுக செய்த டீசென்ட் வெர்ஷன் அம்பலமாகி உள்ளது என திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் விஜய், “தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என திமுக செய்த டீசென்ட் வெர்ஷன் அம்பலமாகி உள்ளது. ஆட்சிக்கு தடையாக இருக்க மாட்டோம் என ரெக்கார்டில் இசைக்க விடுவது வேறு ரகம். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தவெக சாதித்து காட்டத்தான் போகிறது. திமுக செய்ய முடியாத மக்கள் நலத்திட்டங்களை மேஜிக்கலாக தவெக செய்யப்போகிறது.
மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை” எனக் கூறியுளார்.

