மு.க.ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற வேண்டும்- விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட திடீரென தலைச்சுற்றல் ஏற்படவே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்தும், அதுதொடர்பான பணிகள் குறுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இருப்பினும் 4வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் தொடர் சிக்கிசையில் இருந்து வருகிறார். அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) July 24, 2025
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


