விஜய்யின் உதவியாளர் மகன் மாவட்ட செயலாளராக நியமனம்

 
விஜய்

விஜயின் உதவியாளர் மகன் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மற்றும் அறிவிப்பு கூட்டம் விஜய் தலைமையில் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆம்  கட்டமாக விருதுநகர், சென்னை விருகம்பாக்கம், திருவள்ளூர், திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை புறநகர், கூடலூர் உள்ளிட்ட 19 மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் விஜயின் உதவியாளர் ராஜேந்திரனின் 27 வயது மகன் சபரிநாதன்  மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜயின் கார் ஓட்டுநராக இருந்த ராஜேந்திரன் தற்போது, உதவியாளராக உள்ளார். இந்நிலையில் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதனை அறிவித்தார் தவெக தலைவர் விஜய். கடும் போட்டிக்கு மத்தியில் சபரிநாதன் மாவட்ட செயலாளராக பொறுப்பு பெற்றுள்ளார். இதனிடையே பதவிக்காகவே கட்சியில் சேர்ந்ததாக சபரிநாதன் கூறியுள்ளது தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.