நேரடியாக களத்தில் இறங்கும் விஜய்... ஜூலை 13 மாபெரும் ஆர்ப்பாட்டம்

 
பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்கிறார் விஜய்?  பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்கிறார் விஜய்? 

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் (ஜூலை 13) அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Vijay tvk

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பேராசிரியை நிதிதா நகை திருட்டுப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து அஜித்குமார் காவல் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, தவெக அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து ஜூலை 13 என்று அக்கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் விஜய் பங்கேற்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.