“அன்னையர் தினத்தில் மகன் பதவியேற்பது மிகவும் மகிழ்ச்சி”- விஜய் தாய் ஷோபனா
அன்னையர் தினத்தில் மகன் பதவியேற்பது மிகவும் மகிழ்ச்சி என விஜய் தாய் ஷோபனா கூறியுள்ளார்.

#WATCH | Chennai, Tamil Nadu: Shoba Chandrasekhar, mother of TVK Chief and CM-designate, Vijay, says, "I am so happy. It is Mother's Day today, I am very happy..." pic.twitter.com/Ti4DM4iCVl
— ANI (@ANI) May 10, 2026
தவெக தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்க நிலையில், சென்னை காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 12 இணை ஆணையர்கள், 20 துணை ஆணையர்கள், 40 உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 6000 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேரு மைதானம் உள்ளே வெளியே மற்றும் முதல்வர் விஜய் செல்லும் வழித்தடங்கள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#WATCH | Chennai, Tamil Nadu: SA Chandrasekhar, Director and father of TVK Chief and CM-designate, Vijay, says, "I am very happy. We are going to attend the function. I am going to enjoy that my son is going to take the oath as the Chief Minister of Tamil Nadu." pic.twitter.com/CHYcSqogEy
— ANI (@ANI) May 10, 2026
இந்நிலையில் விஜயின் பதவியேற்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் தாய் ஷோபனா, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று அன்னையர் தினம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். இதேபோல் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளப் போகிறோம். என் மகன் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கப் போவதை நான் மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போகிறேன்" என்றார்.

