பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் உத்தரவு!

 
tvk

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். இதனிடையே தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.   

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நிர்வாகி நியமிக்க விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பூத் கமிட்டி உறுப்பினர்கள் 5 முதல் 7 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது, பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.