கரூர் சம்பவத்துக்கு பின் உஷாரான விஜய்! அதிரடி முடிவு

 
பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய் பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய்

தவெக பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி - விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக காவல் துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IB இயக்குனர், DGP, ADGP உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இந்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு திட்டமிடல், கட்சியின் தொண்டர் அணிக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவார்கள் என சொல்லப்படுகிறது. 

கரூரில் செப். 27 ஆம் தேதியில், விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 நாள்கள் பிறகு, பாதிக்கப்பட்டோரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட விஜய், அவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு வரவழைத்து, திங்கள்கிழமையில் (அக். 27) ஒரு தனியார் விடுதி அரங்கில் அவர்களைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.