வைகோவை நேரில் சென்று சந்தித்தார் விஜய்
மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்
சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு சென்றார் முதலமைச்சர் விஜய். அவரை துரைவைகோ வீட்டு வாசலில் வரவேற்று பொன்னாடை போர்த்தினார். பின்னர் வைகோவையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் வைகோ அவர்களை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க இருக்கிறார் .
இதேபோல் இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய். குடியரசு தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்கிறார். நேற்று பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரதமரிடம் தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க டெல்லி பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

