பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்கிறார் விஜய்?

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது, புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை வரும் 19 அல்லது 20 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக போராட்ட குழுவினரை விஜய் சந்திக்கவுள்ளார். ஆகவே போராட்டக்காரர்களுடனான சந்திப்பு நடைபெறும் இடமாக கூறப்படும் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே அந்த இடத்தை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பார்வையிட்டார். பரந்தூர் போராட்டக்குழு மக்களை சந்திக்க விஜய் செல்வதற்கு காவல்துறையிடமும் தவெக தலைமை அனுமதி கேட்டுள்ளது.