விரைவில் தவெக பொதுக்கூட்டங்கள்? தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்? சூடுபிடிக்கும் அரசியல் களம்
சென்னை பனையூரில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜய் வந்தார்.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். தமிழகம் முழுவதும் கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் விஜய்யின் பயண திட்டம் குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள் 138 பேர் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். விஜய் குறித்து சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறும் விமர்சனங்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.கூட்டத்தில் விக்கிரவாண்டி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய கட்சி நிர்வாகிகளை விஜய் நேரில் வாழ்த்தி பாராட்டுகிறார்.


