“5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள்”- விஜய்
பேசு பேசு என்று சொல்கிறார்கள், ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள், PARTY FUND என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள் என முதலமைச்சர் விஜய் கூறினார்.
வேட்டைக்காரன் பாடல் பாடி கரூர் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர் விஜய், “பேசு பேசு என்று சொல்கிறார்கள்; ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள்; PARTY FUND என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். ‘டாக் லெஸ், ஒர்க் மோர்' என்பதே நமது அரசியல்; ‘பேச்சை குறை, வேலையை செய்' இதுவே எங்கள் கொள்கை. உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனச் சொல்லுங்கள் நான் இருக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை; தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது.
ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது ரொம்ப சந்தோசம். தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது; கூட்டுக் களவாணிகள்... எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா?; இடைத் தேர்தலில் நிரூபியுங்கள், பிறகு பேசுங்கள். ”கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.. இன்னொருத்தரு வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்காரு..” நாங்கள் வாஷிங் மெஷினா?; திமுகதான் வெண்டிங் மெஷின்; அரசியல் வியாபாரத்துக்கான வெண்டிங் மிஷன் திமுக. ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாசாரத்தை உடைத்தது தவெக. அறிஞர் அண்ணா பிறந்தநாளில் உங்கள் அண்ணனுடைய அரசில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். இந்த விஜய், தீயசக்தி மாதிரி ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்” என்றார்.

