திட்டமிட்டு திருடி வெளியிடப்பட்டதா ஜனநாயகன்?- போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 
ச்

ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் பட எடிட்டர் என கூறப்பட்ட உமா சங்கர் சாப்ட்வேர் என்ஜினியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் சட்டவிரோதமாக, ஆன்லைனில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். உமா சங்கர் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த சைபர் கிரைம் போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, போலீசார் தன்னை நெருங்கவிடாமல் உமா சங்கர் பார்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவழியாக உமா சங்கரின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, படத்தை அதன்மூலம் அப்லோடு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உமாசங்கரை பின்னணியில் இயக்கியது யார்? எதற்காக? இதனை செய்தார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜனநாயகன் லீக் ஆனதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எடிட்டர் உமாசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 


இந்த சூழலில்தான், எடிட்டர் எனக்கூறப்பட்ட சாப்ட்வேர் என்ஜினியரான உமாசங்கர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தன்னை பலிகடா ஆக்க முயற்சிகள் நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனநாயகன் படத்தை காப்பி செய்து கொடுத்த நபர், வேறு திரைப்படத்தின் எடிட்டராக பிரிலான்சராக வந்த பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. ஜனநாயகன் படம் எடிட்டிங் அறை சாவியை திருடி, அறை உள்ளே சென்று படத்தை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது