நாளை வேளாங்கண்ணி, நாகூருக்கு செல்கிறார் விஜய்!

 
எனது தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் - விஜய் வாக்குறுதி

நாளை அன்னை வேளாங்கண்ணி கோயில் சென்று வழிபட இருக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது” - விஜய்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு விஜய் நன்றி சொன்னார். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்களை சந்திப்பேன்  என்றும் அவர் கூறினார்.  முன்னதாக தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து சீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்தார். 

இந்நிலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை காலை 5 மணிக்கு பிரார்த்தனை செய்கிறார் விஜய். அதனை தொடர்ந்து நாகூர் தர்காவுக்கும் செல்லவிருக்கிறார்.