திருச்சி பச்ச நாச்சி அம்மன் கோவிலிலுக்கு சென்ற விஜய்
திருச்சி பரப்புரையின் போது கொட்டப்பட்டு பச்ச நாச்சி அம்மன் கோவிலிலுக்கு சென்று தரிசித்து மனமுருகி வேண்டிக்கொண்டார் த.வெ.க தலைவர் விஜய்.

விஜய்-யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார்.
அந்தவகையில் தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் விசில் ஊதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரைக்கு இடையே திருச்சி பரப்புரையின் போது கொட்டப்பட்டு பச்ச நாச்சி அம்மன் கோவிலிலுக்கு சென்று தரிசித்து மனமுருகி வேண்டிக்கொண்டார் த.வெ.க தலைவர் விஜய். முன்னதாக திருச்சி புனித அந்தோணியார் தேவாலயத்தில் முழங்காலிட்டு நடந்து பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


