அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய்... கோட் சூட் உடன் கெத்தாக வருகை

 
அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய்... கோட் சூட் உடன் கெத்தாக வருகை

அரங்கம் அதிர அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய், கோட் சூட் உடன் பதவியேற்பு விழா மேடைக்கு கெத்தாக வருகை புரிந்தார்.


2024 பிப்ரவரி 2ஆம் தேதி கட்சி தொடங்கிய விஜய், இரண்டே ஆண்டுகளில் அரியணையில் அமர்ந்துள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அரியணையிலும் அமர்கிறது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து திரைத்துறையில் இருந்து மேலும் ஒருவர் முதல்வராகியுள்ளார். அண்ணாதுரை முதல்வராவதற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களுக்கு கதை,வசனம் எழுதியுள்ளார். மொத்தம் 69 இடங்களில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். அரசியல் கதைகளை  தேர்வு செய்து நடித்த விஜய்  அதில் அனல் பறக்கும் அரசியல் வசனங்களையும் பேசினார்.

2009 ஆம் ஆண்டு ரசிகர் மன்றம் தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் பரப்புரை செய்தார். 2021 உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றனர். பின்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், தேர்தல் ஆணையத்தில் அதனை பதிவு செய்தார். 2024ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரியணை ஏறி சரித்திரம் படைத்துள்ளார். தமிழ்நாட்டில்  59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் அல்லாத அரசாங்கம் அமைந்துள்ளது.