கடைசி நேர ட்விஸ்ட்- விசிக ஓகே சொல்லாமலேயே பெரும்பான்மையை பெற்றது தவெக

 
ச்

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்த நிலையில், விஜய் ஆளுநரை சந்திக்க புறப்பட்டுவிட்டார்.

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் விஜய்க்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தங்களது 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை விஜய்க்கு அளித்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் பக்கம் வந்துள்ளனர். இதனையடுத்து ஆட்சியமைக்க அனுமதிக்கோரி ஆளுநரை சந்த்க்க விஜய் சிரித்த முகத்தோடு புறப்பட்டார்.