#BREAKING தனியார் மருத்துவனைக்கு சென்ற விஜய்!

 
#BREAKING தனியார் மருத்துவனைக்கு சென்ற விஜய்- என்ன ஆச்சு?

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கிளினிக்கில் தமிழக முதலமைச்சர் மருத்துவ ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்பான ஆலோசனை  பெறுவதற்காக  தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார். ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலை முதல் குறுக்குத் தெருவில் இயங்கி வரும் பெர்ல் ஹெல்த் கிளினிக்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார். அங்கு மருத்துவர் தீபக் சுப்பிரமணியனை சந்தித்து, தனது உடல்நிலை தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெற்றார். மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு முதலமைச்சர்  கிளினிக்கில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த போது கூடியிருந்த பொது மக்களுக்கு கைகளை கொடுத்து உற்சாகம் அளித்தார். ஏராளமான பொதுமக்கள் அவரை காண்பதற்காக கூடி மகிழ்ச்சியில் கோஷங்களை எழுப்பினர்.