நாளை முதல்வர் விஜய் திடீர் டெல்லி பயணம்
நவம்பர் 16-ஆம் தேதி முதல்வர் விஜய் டெல்லி செல்கிறார். கடந்த மே மாதம் முதல்வராக பதவியேற்ற பிறகு இது 2-வது முக்கியமான டெல்லி பயணமாகும். நவம்பர் 16-ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, தமிழ்நாடு இல்லம் வந்து, அங்கிருந்து அடுத்தடுத்து முக்கிய சந்திப்புகள் நடக்கப்போவதாக தெரிகிறது.
டெல்லி சேவா தீர்த்தில் மாலை 4.30 மணிக்கு சுமார் 25 நிமிடம் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திக்கிறார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி அமித்ஷாவிடம் ரிப்போர்ட் கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்க விஜய்யும் அமித்ஷாவை சந்திக்கிறார். அடுத்து தமிழ்நாட்டுக்கு நிதி கேட்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கிறார். தொடர்ந்து துணை ஜனாதிபதி C.P. ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஜன்பத்-ல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வர் விஜய் சந்திக்கிறார்.

