#BREAKING இன்று மாலை டெல்லி செல்கிறார் விஜய்

 
விஜய் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மாலை டெல்லி செல்கிறார். 

விஜய்


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக கடந்த 12ம் தேதி 7 மணி நேரம் புதுடெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜரான  தவெக தலைவர் விஜய் மீண்டும் நாளை காலை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக அவரது தனிவிமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மாலையே டெல்லிக்கு புறப்படுகிறார். இன்றிரவு டெல்லியில் ITC Maurya ஹோட்டலில் தங்குகிறார். விசாரணையை ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சிபிஐ இதுவரை பதில் கூறாததால் இன்றே டெல்லி புறப்படுகிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.