பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றலாமா? - முதல்வர் விஜய் ஆலோசனை

 
s

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பை ஜூன் 1-இல் இருந்து ஜூன் 5ஆம் தேதிக்கு மாற்றலாமா என முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு வழக்கம் போல் ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பை ஜூன் 1-இல் இருந்து ஜூன் 5ஆம் தேதிக்கு மாற்றலாமா என முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விஜய் கேட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.