நரேந்திர மோடிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

 
tn

இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் பதவியேற்பு விழா  நேற்று நடைபெற்றது. விழாவில் இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில்  இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.