காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பு... QR கோடு நுழைவுச்சீட்டு உள்ளோருக்கு மட்டுமே அனுமதி

 
ச்

கரூர் சம்பவத்திற்க்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க முதல் முறையாக காஞ்சிபுரத்திற்கு சற்று நேரத்தில் வருகை தர உள்ளார் தவெக தலைவர் விஜய்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெவெக நிகழ்ச்சியில் பங்கேற்று  கரூர் கூட்ட நெரிலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். கரூர் சம்பவத்திற்க்கு பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீண்டும் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொதுமக்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகை தர உள்ளார். காலை 11 மணிக்கு மேல் வருகை தரும் விஜய் ஒரு மணி நேரம் பொதுமக்களை சந்தித்து உரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களை சுமார் 1600 பேர் சந்திக்க திட்டமிட்டுள்ள விஜய், காஞ்சிபுரம் அருகே பரனூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள நிலையில் விமான நிலையத்திற்க்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்று பொதுமக்களை சந்திக்க காஞ்சிபுரம் வரும் விஜய் நிகழ்ச்சியில் கண்டிபாக குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். தமிழக வெற்றிக்கழக நிகழ்ச்சியில் கட்டாயம் இனி வரும் எந்த நிகழ்ச்சியில் குழைந்தைகளுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு விஜய் வருகை தர இருப்பதால் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வருகை தரும் வாகனங்களை தீவிர சோதனை செய்து உரிய அனுமதியும் வருகை தரும் வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர்.