ஒருநாள் இஸ்லாமியரான விஜய்! வெள்ளை தொப்பி, வெள்ளை கைலி, சட்டையுடன் வருகை

 
விஜய்

த.வெ.க சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை புரிந்தார்.

 

null


தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை புரிந்துள்ளார். வெள்ளை தொப்பி, வெள்ளை கைலி, சட்டையுடன் வந்த விஜய், ரசிகர்கள் மற்றும் அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார். தவெக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு அரங்கிற்குள் செல்ல முயன்றதால் கண்ணாடி கதவுகள் உடைந்தது.

சுமார் 2000 பேர் வரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். டேபிள், நாற்காலி எதுவும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தரையில் அமர்ந்து நோன்பு திறந்து தொழுகையில் ஈடுபடுகின்றனர்.