முதுகில் அலகு குத்தி கிரேன் மூலம் விஜய்க்கு மாலை போட வந்தவர் கைது

 
வ்ன்

முதுகில் அலகு குத்தி கிரேன் மூலம் விஜய்க்கு மாலை போட வந்தவர் கைது செய்யப்பட்டார். 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்து அகரம்சேரியில் நடந்த த.வெ.க.நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின்  தலைவர் விஜய் சென்னையில்இருந்து காரில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். வழி நெடுகிலும் அவரைக் காண பொதுமக்களும் தொண்டர்களும் குவிந்தனர். இந்த நிலையில் வெட்டுவானம் அருகே பாலம் கட்டு பணி நடந்து வருகிறஹிருவல்லுர். அப்போது போலீசார் அனுமதி இல்லாமல் கிரேன்மூலம் அலகு குத்திக்கொண்டு ஒருநபர் அந்தரத்தில் மாலை போடுவதற்காக வந்தார்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த நபரை கீழே இறக்கி காவல் நிலையம் பள்ளிகொண்டா நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாட்டிமான பல்லி ஊராட்சி கவுன்சிலராக உள்ள ஏழுமலை என தெரிய வந்தது .

இதனையடுத்து பள்ளிகொண்டா போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் விஜய்க்கு மாலை அணிவிப்பதற்கான அனுமதி பெறாததாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்தனர். மேலும் கிரேன் வாகனத்தையும் பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் முனிரத்தினம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பிறகு இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.