தவெகவின் முழு தேர்தல் அறிக்கை ஏப்.16ம் தேதி வெளியிடப்படும்- விஜய்
கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களுக்கு என் அன்பு வணக்கம் என தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுரில் பேசிய விஜய், “நெசவாளர்களின் தயாரிப்புகள் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும். தவெகவின் முழு தேர்தல் அறிக்கை ஏப்.16ம் தேதி வெளியிடப்படும். கைத்தறி இலவச மின்சாரம் 500 யூனிட் இலவச மின்சாரம்... நிலையற்ற நூல் விலை, மின்சார சுமையை பகிர்ந்துகொள்ள நெசவாளர்கள் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும். நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயம் உள்ளிட்டவற்றுக்கு 50% மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 வழங்கப்படும். பீக் ஹவர்ஸ் மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்தியாவிலேயே அதிக எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது” என்றார்.



