"100 நாட்களில் தவெக அரசு செய்தது என்ன?"- பட்டியலிட்ட முதல்வர் விஜய்
தாராபுரம் பரப்புரையின்போது 100 நாட்களில் தவெக அரசு செய்த சாதனைகளை முதல்வர் விஜய் பட்டியலிட்டார்.

📍 தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே மாநில அளவில் நாம் கொடுத்து வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.
📍 நமது அரசு பதவியேற்ற நாள் முதல் கொடுத்த வாக்குறுதியான ஊழல் லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தினை முழு முனைப்போடு உறுதிப்படுத்தி வருகிறோம்.
📍 அரசு பொறுப்பேற்ற பின் பள்ளி ஆலயங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
📍 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
📍 பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
📍 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப் பொருள் தடுப்பு படைகள் அமைத்து போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.
📍 பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது..
📍 13 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
📍 நெல்மணிகளுக்கு ஊக்கத்தொகை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டு மொத்தமாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2750 ரூபாய் ஆகவும், புதுவராக நெல்லுக்கு குவிண்டால் 2600 ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
📍 பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
📍 தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
📍 தமிழ்நாடு முழுவதும் மகளிர் இலவசமாக பயணிக்க வெற்றிப் பயணித்திட்டம் மாநிலம் முழுவதும் அக்டோபர் 2 தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
📍 ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்கும் அன்னபூரணி சூப்பர் திட்டம் வரும் பொங்கல் முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
📍 குடும்பத்திற்கான முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு உதவித்தொகை 5 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
📍 தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா இலவச சிகிச்சை வழங்கும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📍 630 அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
📍 மகளிர் தொழில் முனைவோருக்காக சிங்கப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📍 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை மற்றும் போக்குவரத்து அமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முதல் கட்டப் பணிகள் துவங்கியுள்ளன.
📍 முதல் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்துத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

