“இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி..”- முதல்வர் விஜய்
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீர்களா? என முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் தாராபுரம் அருகே சித்ராவுத்தன்பாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட விஜய், “அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பாவின் ஆட்சி, இப்போது நடப்பது பிள்ளைகளின் ஆட்சி. அண்ணாவை மறந்து, அவர் ஆரம்பித்த கட்சியை மறந்து திமுகவோடு கூட்டு சேர்ந்து சுற்றுவோர் நாம் கிடையாது. கட்சிக்காரர்களை விட்டு தனக்கு எதிராக ஏவி விட்டு திமுக தலைமை ஒருமையில் பேசுகிறது. ஆபாச நதி, வன்ம நதியை வைத்து திமுக தரம் தாழ்ந்து பேசட்டும். மக்கள் நம்மை உயர்த்துவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல்தில்லாக திமுகவை எதிர்க்கக்கூடியவர்கள் நாம்தான். அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான். அவர்கள் சொல்லும் பொய்யை நம்பாதீர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீர்களா? எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி சத்தியபாமா, முறையாக ராஜினாமா செய்துவிட்டு வந்தார். கொங்கு பகுதி மக்கள் சத்தியத்தின் பக்கம் இருப்பீர்கள், அதனால் சத்தியபாமாவிற்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

