#JUSTNOW விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்
Sep 19, 2025, 19:39 IST1758290965702
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளைய தினம் சனிக்கிழமை நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட கட்சியின் தலைவர், இரண்டாவது சுற்று பயணமாக நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து உரையாற்ற உள்ளார்.
சேலம், நாமக்கலில் வரும் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாமக்கல், சேலத்தில் 4 இடங்களில் மக்களை சந்திக்கவும், அதில் 2 இடங்களில் விஜய் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். நாமக்கல், சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூரில் 27ம் தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

