ஜே.சி.டி.பிரபாகரை ஆதரித்து விஜய் பிரச்சாரம்! எம்ஜிஆர் புகைப்படத்தை பரிசாக அளித்து நெகிழ்ச்சி
சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ரோட் ஷோ மேற்கொண்டார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆனந்த், ஜே.சி.பி.பிரபாகர், ராஜ் மோகன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட முத்துரங்கன் சாலையில் அத்தொகுதி வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து ரோட் ஷோ மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அங்கிருந்து தனது பிரசார வாகனத்தின் மேல் நின்றபடி, நுங்கம்பாக்கம் வந்தடைந்தர். இதனையடுத்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சுதந்திர தின பூங்கா அருகே ஆயிரம் விளக்கு தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது, ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை விஜய்க்கு பரிசாக அளித்தார்.
JCD பிரபாகர் அவர்களை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் அண்ணன் @TVKVijayHQ பிரச்சாரம்
— 𝔸𝕒𝕣𝕒𝕥𝕙𝕒𝕟𝕒 🇪🇸 (@princess_tvkvj_) April 15, 2026
#VoteForwhistle #TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம்#ThalapathyVijay
pic.twitter.com/gBSSuoOPeh
நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகே விஜய் மக்களை சந்திப்பதற்காகவும் உரையாற்றுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியில் அவரை காண ஏராளமானோர் காத்திருந்த நிலையில் 5 நிமிடத்திற்கும் குறைவாகவே அங்கு இருந்த விஜய் உரையாற்றமலே புறப்பட்டு சென்றார். இதனிடையே, தவெக தலைவர் விஜய் வரும்போது, அவரது வாகனத்தை நோக்கி தவெக தொண்டர்கள் முண்டியடித்து நெருங்கி வந்ததன் காரணமாக நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயக்கமடைந்தார். இதனையடுத்து, மயக்கமடைந்த பெண்ணை அங்குள்ள நிர்வாகிகள் ஆம்புலன்சில் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.



