“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது” - விஜய்
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது என சென்னை நந்தனத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறினார்.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் தவெக கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை திமுக அரசு உயர்த்தியது. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்வி கடனையாவது ரத்து செய்திருக்கலாம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது. மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலிலின் கடைசி பிரச்சாரம். மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. வீட்டு வரி உயர்ந்துள்ளது, குப்பைக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. அடைமழையாக பணமழை பொழிந்தாலும், ஏப்ரல் 23ஆம் தேதி அன்று ஒற்றைத் தேர்வாக விசில் சின்னம் மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூம்பி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

