திருச்சியில் விஜய் அனல் பறக்க பிரச்சாரம்
Apr 19, 2026, 15:46 IST1776593789697
திருச்சியில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விஜய்-யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார்.
அந்தவகையில் தவெக டதலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் விசில் ஊதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி ரோட் ஷோ சென்ற விஜய்க்கு பொதுமக்களும்,தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தலுக்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையில் விஜய் ஈடுபட்டுவருகிறார்.


