காலை முதல் தீவிர பிரச்சாரம்... பிரச்சாரத்தில் தடுமாறிய விஜய்- பதறிய பவுன்சர்
சென்னை அண்ணா நகரில் பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்க முயற்சி செய்த விஜயை ரசிகர்கள், தொண்டர்கள் சூழ்ந்ததால் மீண்டும் வாகனத்துக்குள்ளே சென்றுவிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பரப்புரை மேற்கொள்ள நாளை கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை வில்லிவாக்கம் , அண்ணா நகர் , விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்டார். மதியமுதலே விஜய் பரப்புரை மேற்கொள்ள வரும் இடங்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கொண்டிருந்தனர். விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் எந்த இடத்திலும் விஜய் பரப்புரை பிரச்சாரம் மேற்கொள்ளாததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தடுமாறிய விஜய்.. பதறிய பவுன்சர்.. பரபரப்பு காட்சி!#Chennai #Vijay #Bussyanand #TVK #VijayCampaign #TVKVijayCampaign #Newstamil24x7 pic.twitter.com/7Nf0noML7A
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) April 20, 2026
பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைப் பார்த்து கையேசைத்து மட்டும் சென்றார் . மேலும் , விஜய் வரும் இடங்களுக்கு கை குழந்தைகளை அவரது ரசிகர்களும் தொண்டர்களும் அழைத்து வந்தனர். அண்ணாநகர் பகுதியில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் கோப்பை தலைக்கவசம் ஆகியவற்றை அன்பளிப்பாக கொடுத்தனர் அப்பகுதியில் கீழே இறங்க முயற்சி செய்தபோது ரசிகர்கள் சூழ்ந்ததால் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்த அவர் மீண்டும் பிரச்சார வாகனத்திற்கு உள்ளே சென்றுவிட்டார். தொடர்ந்து கேகே நகர், எம்ஜிஆர் மார்க்கெட் அருகே வந்த அவர் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சிறு தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அங்கிருந்து மீண்டும் வாகனத்தில் ஏறி கைசைத்தபடி வந்த அவர் திடீரென சட்டென்று தடுமாறினார். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.


