தவெக பேனர் கிழிப்பு- போலீசாருடன் வாக்குவாதம்

 
அ

சென்னை எண்ணூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தவெக கட்சியினரின் பேனர் கிழிக்கப்பட்டதால் போலீசாரோடு தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழக கட்சியின் இரண்டாம் ஆண்டை அக்கட்சியினர் பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர். சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த தவெக கட்சி நிர்வாகிகள் இரண்டாம் ஆண்டை கொண்டாடும் வகையில், எண்ணூர் மார்கெட் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். நேற்று இந்த பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த பேனரானது கிழிக்கப்பட்டுள்ளது.

பேனரை மர்ம நபர்கள் கிழித்து விட்டதாக கூறி பேனர் வைத்த இடத்தில் தவெக தொண்டர்கள் குவிந்தனர். தகவலறிந்து  எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீசாரிடம் பேனரை கிழித்தவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இசிஆர் பகுதில் இதே போன்று தவெக கட்சியினர் பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து, எண்ணூர் பகுதியிலும் இச்சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.