பரந்தூர் வந்தார் தவெக தலைவர் விஜய்

 
விஜய்

பரந்தூர் விமான நிலையதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பரந்தூர் மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகை தந்தார்.

Image


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. இந்நிலையில் இதனை எதிர்த்து காஞ்சிபுரம் ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பிரச்சனைக்கு ஆளுநரை சந்தித்து விஜய் புகார் அளித்த நிலையில், இன்று பரந்தூர் போராட்டக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்க பரந்தூர் வந்தடைந்தார். பரந்தூர் பகுதி மக்களை சந்திக்க கேரவனில் கட்சி கொடியேந்திய படி தொண்டர்களுக்கு கையசைத்தார் தவெக தலைவர் விஜய். 

பரந்தூர் சென்ற விஜய்க்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் வந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் தான் தவெக தலைவர் விஜய் பொது மக்களை சந்திக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மண்டபத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். விஜயின் வருகை அறிந்து ரசிகர்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.