மீனவர் பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்படும்- விஜய்

 
மீனவர் பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்படும்- விஜய்

கன்னியாகுமரியில் மீனவர்களுக்கான வாக்குறுதிகளை பட்டியலிட்டு விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய விஜய், 

  • மீனவர் பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
  • படகு பாதுகாப்பு நிதியாக ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் 6 மாதத்தில் நிறைவேற்றப்படும்.
  • கடல் தாய் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், கடலோர குடிசைகள்  புயல்களை தாங்ககூடிய வீடுகள் கட்டப்படும்
  • மீனவர் எரிப்பொருள் திட்டம்- மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீடு 1,800 லிட்டரிலிருந்து ரூ 3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு ரூ.15 மானியம் வழங்கப்படும். 
  • மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் வரி வசூலிக்கப்படாது.
  • அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று சேர தனி அடையாள அட்டை. ஆதார் கார்டு போல தமிழ்நாடு பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும்.
  • அரசின் சேவைகளை அதன்மூலம் பெறமுடியும். நமது அரசில் பொதுமக்கள் அனைவரும் அரசில் பங்காக இருப்பார்கள்.