“கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம்! உடனே இதை செய்யுங்க” - நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்
இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் சந்திக்க வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
![]()
கரூர் துயரத்தால் துவண்டு விட வேண்டாம் என கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் வாட்ஸ் ஆப் கால் மூலம் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நான் விரைவில் சந்திக்க வேண்டும், ஏற்பாடுகளை செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இது போன்ற ஒரு சூழலை சந்திப்போம் என நினைத்துக்கூட பார்த்ததில்லை என வேதனை தெரிவித்துள்ள அவர், துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள் என்றும், அனைவரும் நம்பிக்கையுடன், புதிய வேகத்துடன் செயல்படுங்கள் எனவும் தவெக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தவெகவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிடுவோர் மீது வழக்கு பதியப்பட்டாலோ, கைதானாலோ சட்ட ரீதியான உதவிகளை வழங்கவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கமாக மாவட்ட செயலாளர்களிடம் பொதுச்செயலாளர் ஆனந்த் தான் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதால் விஜய் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


