"கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது”- விஜய் அறிவுரை

 
vijay

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் விஜய் 3ம் கட்டமாக நியமனம் செய்யப்பட்டுள்ள 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “2026 இலக்குக்காக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன், நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். உங்கள் உழைப்பில் தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது. நானும் உழைக்கிறேன், நீங்களும் உழையுங்கள். வெற்றி அடைவோம். மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது” என்றார்.