ஆனந்த் Vs ஆதவ்- இரண்டாக உடையும் தவெக!
தவெகவில் புஸ்ஸி ஆனந்த்- ஆதவ் அர்ஜூனா இடையே அதிகார மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவில் புஸ்ஸி ஆனந்த்- ஆதவ் அர்ஜூனா இடையே அதிகார மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவள்ளூர் மாவட்ட செயலாளருக்கு எதிராக தவெகவினரே போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரி விஜய் நிகழ்விற்காக போன் செய்தபோது மாவட்ட செயலாளர்கள் ஆதவ் போனை எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் ஆனந்த் தவிர மற்ற யாரிடமும் தொடர்பில் இருப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. ஆதவ், அறிவுறுத்தல்கள் கூறினாலும், பொதுச்செயலாளரிடம் கேட்டு வருகிறேன் என மாவட்ட செயலாளர்கள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே திருவள்ளூரில் தவெக பேனரில் ஆதவ் படத்தை வைத்ததாக கூறி வட்ட செயலாளர் பிரதீப் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் விஜய், ஆனந்த் படங்களை தவிர மற்றவர்கள் படங்களை பயன்படுத்தக்கூடாது என கூறியதாகவும் தெரிகிறது.

இதேபோல் தவெக நிர்வாகி அருண்ராஜூம், புஸ்ஸி ஆனந்த் மீது பல்வேறு புகார்களை கூறியுள்ளார். புதுச்சேரி கூட்டத்து பாஸ் கொண்டு போகவில்லை, மைதானத்துக்கு வெளியே இருந்து புஸ்ஸி ஆனந்துக்கு போன் செய்தும், அவர் எடுக்கவில்லை. என் செல்போன் நம்பரை பார்த்தும் புஸ்ஸி ஆனந்த் எடுத்து பேசவில்லை. விஜய் சாருடன் நாள்தோறும் பேசி செயல்படும் எனக்கே இந்த நிலைமையா என அருண்ராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


