தவெகவின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது. சென்னை புறநகர் - சரவணன், தென் சென்னை தெற்கு - தாமு, புதுக்கோட்டை - பர்வேஸ், நாகை- சுகுமார், தருமபுரி மேற்கு- சிவா, கள்ளக்குறிச்சி மேற்கு- பிரகாஷ், கன்னியாகுமரி மத்திய மாவட்டம்- கிருஷ்ணகுமார், அம்பத்தூர்- பாலமுருகன், மதுரை மேற்கு- தங்கபாண்டி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.