இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தவெக ஒன்றிய செயலாளர் கைது
Jun 18, 2026, 14:38 IST1781773692753
திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் பேருந்திற்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அவருடைய நண்பர் அசோக்கும் கைது செய்யபட்டு, அவர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

