ரூ.5,000 வாங்குன சூரஜ்... அதை அனுபவிக்காமல் சென்ற சோகம்! விஜய்யால் கலங்கி நிற்கும் கொடுமை

 
அ அ

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய் பார்க்க வந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் சீ்லநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். காலை 8 மணி முதல்  கடும் வெயிலில் தவெக தொண்டர்களும்,  ரசிகர்களும் காத்திருந்த நிலையில் மதியம் 12.30 மணிக்கு விஜய் பேசினார். இந்நிலையில் விஜயை காண கூட்டத்திற்கு வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சூரஜ் (37) என்பவர் அங்கு திடிரென மயங்கி விழுந்தார். போலீசார் மற்றும் தவெகவினர் அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் சூரஜ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் கடந்த 20 ஆண்டுகளாக சேலம் சீலநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் தங்கி வெள்ளி உருக்கும் வேலை செய்து வந்தார். மேலும் அவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். சூரஜ் மரணத்தை உறுதி செய்த நிலையில் பள்ளிச் சென்ற குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதனிடையே தனியார் மருத்துவமனையில்  இருந்த உயிரிழந்த சூரஜை உடலை காண உறவினர்கள், பணியாளர்கள் குவிந்தனர். பின்னர் சூரஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பேசிய அக்கம் பக்கத்தினர் கூறுகையில், “நீண்ட ஆண்டுகளாக வசித்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதிக பாசம் உள்ளவர். மனைவிக்கு தமிழ் தெரியாது இதனால் சூரஜ் இங்குள்ள அனைவரிடமும் நன்கு பழகி வந்தார். காலையில் கூட அரசு அறிவித்த 5 ஆயிரம் வந்துவிட்டதா என கேட்டார் மிகுந்த வேதனையாக உள்ளது. பாஸ் தனது முதலாளி மூலம் கிடைத்ததாக கூறினார். குடும்பத்திற்கு ஏதாவது உதவ வேண்டும்” என்றனர்.

Advertisement