"சொருவிடுவேன், முடிஞ்சா தொட்டு பாருடா" என பேசிய தவெக ஆதரவாளர் கைது
நேற்று முன் தினம் யூடியுபர்கள் @RoastbrotherS- ஐ ஊடகங்களின் முன்பாகவே “சொருவிடுவேன்” என்று கொலைமிரட்டல் விடுத்த கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ரோகினி திரையரங்கின் வெளியே யூடுயூபர்கள் சிலர் த.வெ.க.கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்தனர். அப்போது நடுவே வந்த விஜய் ரசிகர் ஒருவர் விஜய்க்கு ஆதரவாக பேச ஆரம்பித்த போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. அப்போது யூடியூபர்களை பார்த்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
#சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம்
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) October 3, 2025
"த்தா.. சொருவிடுவேன், முடிஞ்சா தொட்டு பாரு டா" என்று பேசிய தவெக ஆதரவாளர் கோகுல் (29) கைது.
- இவர் யாருன்னே தெரியாது - தவெக விளக்கம் pic.twitter.com/NQjWsJoZ2s
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், யூடுயூபர்கள் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் ஆபாசமாக பேசுதல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குபதிவு செய்து அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆழ்வார்திருநகரை சேர்ந்த த வெக உறுப்பினர் கோகுல்( வயது 29) என்பவரை கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் கைது செய்தனர்.



