"விஜய்யை வீழ்த்துவதற்கு எவரும் பிறக்கவில்லை"- செங்கோட்டையன்

 
க்ஷ்

கரண்ட் என்று விமர்சனம் பண்றாங்க.. கர்நாடகாவில் ஏழரை மணி நேரம் கரண்ட் கட், ஆந்திராவில் 8 மணி நேரம் கட்.. எங்கையுமே மின்சாரத் தடைதான் என அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய தவெக அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அரசியல் சூழல் உருவாகி வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில்தான் மாற்றம் ஏற்படும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். 100 நாள் அல்ல தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான்.. நம்ம தலைவர் மட்டும் சேப்பாக்கம் போயிருந்தால் வேலை முடிந்திருக்கும்.. தனிப்பட்ட முறையில் சொல்கிறேன், அதிமுகவிலிருந்து தவெக வருவதற்கு இன்னும் 10, 20 எம்.ஏல் ஏக்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கு அப்புறம் தான் இவர்களுக்கு ஆபத்தே. அடுத்த முறை தேர்தல் வந்தால் 234ல் நாம்தான். திமுக ஓட்டுக்கு அடை பவுன் கொடுத்தனர். செலவே பண்ணாமல் ஒரு ஆட்சி வரும்னா அது தவெக ஆட்சிதான்.

இடைத்தேர்தலில் தவெக  மாபெரும் வெற்றி பெறும்.  தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் பண மோசடிகளுக்கு இடமில்லை என்பதால், பொதுமக்களிடம்  யாரும் பணம் கேட்பது கிடையாது.
ஓராண்டு காலத்திற்குப் பிறகு இந்தியாவே வியக்கும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை வழிநடத்தும் தலைவராக விஜய் இருப்பார். அவரை (விஜய்) வீழ்த்துவதற்கு எவரும் தமிழ் மண்ணில் பிறக்கவில்லை என்ற வரலாற்றை நாம் படைப்போம். எல்லோரும் ஒன்றே ஒன்றுதான் சொல்கிறார்கள்.இந்த ஆட்சியில் நாங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறோம். எந்த கஷ்டமும் இல்லை என்று..” என்றார்.