இந்தியாவை ஆளும் சக்தி முதல்வர் விஜய்க்கு உண்டு- செங்கோட்டையன்
தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் ஆளும் சக்தி முதல்வர் விஜய்க்கு உண்டு என அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம் சூட்டினார்.
திருப்பூரில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டை ஆளுகிற சக்தி மட்டும் அல்ல, எதிர்கால இந்தியாவை ஆளக்கூடிய சக்தியாக விளங்கக்கூடியவர்தான் நமது தளபதி... தமிழ்நாட்டு மக்களுக்காகவே முதலமைச்சர் விஜய் வாழ்கிறார்.. அவர் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சர் என்ற வரலாற்றை படைக்க போகிறார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நான் பயணித்துள்ளேன். அவர்களுக்குப் பிறகு தமிழகத்தை வழிநடத்தும் திறன் முதல்வர் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது. என்னை சந்திக்கும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், 'விஜய் போன்ற ஒரு முதலமைச்சர் எங்கள் மாநிலத்திற்கும் எப்போது கிடைப்பார்?” எனக் கேட்கிறார்கள். அவர்களும் நமது முதல்வரை எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் ஆளும் சக்தி கொண்டவர் முதல்வர் விஜய். உங்களுக்கு கிடைத்ததுபோல் எங்களுக்கு எப்போது முதலமைச்சர் கிடைப்பார்? என வட மாநிலத்தவரே கேட்கிறார்கள். அவர்களும் நமது தலைவரை எதிர்பார்க்கிறார்கள். 50 வருஷம் ஆண்ட கட்சிகளை Speaker Sir.. Speaker Sir-னு பர்மிஷன் கேக்க வெச்சிட்டாரு.. அவங்களுக்கு சனி ராசி, நம்ம தலைவருக்கு குரு ராசி.. சனி என்ன பண்ணும்னு தெரியும்ல?.. இப்போ எதிர்க்க அப்பாவியா உக்காந்து இருக்காங்க” என்றார்.

