“விஜய்யை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பர்”- செங்கோட்டையன்

 
செங்கோட்டையன்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

“யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன்

        
பழனி ரயில் நிலைய சாலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வேட்பாளர் மருத்துவர் பிரவீன்குமாரை ஆதரித்து தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் கசிந்ததுள்ளது. இந்த விவகாரத்திற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். சென்சார் போர்டு மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு அமைச்சராக இருக்கும் அவர்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். ஒரு சிறிய விபத்து நடந்தாலே அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லும் நிலையில் இந்தப் படம் இணையத்தில் வெளியானதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் எல். முருகனை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். 

சின்னம்மா, டிடிவி, ஓபிஎஸ் என தன் கூடவே இருந்தவர்களை அழித்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் துரோகத்தின் மொத்த உருவம். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பற்றி விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர். நான் அம்மாவோடு நீண்ட காலம் பயணித்தவன். விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என தெரிவித்தார்.